Posts

Showing posts from February, 2023

அந்த நாள்

 அல்லி மலரும் வேளையிலே அழகாய் நீ கண் சிமிட்டுகிறாய் ஆலம் விழுதை அறுத்து-நீ ஆனந்த யாழை மீட்டுகிறாய் வானமழையாய் நீ வந்தால் வண்ண மயிலாய் நான் களிப்பேன்-உன் இமையில் விழுந்த இளைஞன் நான் இமயத்தின் உயரம் சிறியதடி உன்னை நினைத்தே  என்னிரவு மெல்லமெல்ல நகருதடி உன்னை காணா நாட்களிலே என்னை தொலைத்து தேடுகிறேன் நீ பார்க்காத வேளையிலே உனை பார்த்து இரசிக்கின்றேன்                   -ராம்