Posts

Showing posts from July, 2023

காதலிக்க நேரமில்லை

Image
பொன்மகள் பாதம் மண்மகள் அறியா கண்ணகியாய் நானும் இங்கே உன்னை நினைத்து  என் நாட்களை கழித்துக்கொண்டு காதலை கூட்டிக்கொண்டும்  இருக்கிறேன். நீயோ கோவலனாய் என்னை புறந்தள்ளி என் அகம் நீங்கி  சென்றுவிட்டாய். படிக்காத என் அம்மா, என்னை படித்தது போதுமென்று கையில் அடுப்பூத ஊதாங்கோலை கொடுக்காமல் பேனாவை கொடுத்து அம்மா அனுப்பினாள் கல்லூரிக்கு. இரண்டு மாதங்கள் ஓடியது, அவ்வளவு கூட்டம் அந்த பேருந்தில், வௌவ்வால் போல நீ பேருந்தில் தொத்திக் கொண்டிருந்தாய். கூட்டம் குறைந்ததும் படியில் நின்றபடி உன் நண்பர்கள் சூழ மிரட்டும் தொனியில் 'உன் பெயரென்ன' என்று கேட்டாய்.  முதல்முறையல்ல பேருந்தின் வௌவ்வால்கள் என்னை வம்பிழுப்பது. பெண்ணாய் பிறந்துவிட்டேனே பகடிகளை தாங்கிக்கொள்ளும் பக்குவம் எனக்கு எப்போதோ வந்துவிட்டது. பயந்தே நான் சொன்னேன் 'இசை' என்று.  ஊர்... விலாசம்... கேட்டு நச்சரித்தாய், சொன்னேன் அத்தனையும் பயந்தே!  அந்த பேருந்தில் தான் என் தினசரி என்றபோது பயந்தென்ன லாபமென சகஜமாகிவிட்டேன்.  நிறுத்தம் வந்ததும் என் பின்னே துரத்துவதாக எண்ணி மிரண்டேன். பின்பு தான் தெரிந்தது உனக்கும் அது தான்...