சோளகர் தொட்டி
அறிவியலில் Chaos theroy என்றொன்றுண்டு, நிகழ்வுகள் ஒன்றனுக்கொன்று தொடர்புடையவை என கூறலாம். பிரபலமான எடுத்துக்காட்டாக, ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பிற்கும், எங்கோ உருவாகும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று நீளும். இந்த எடுத்துக்காட்டை நீங்கள் தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் கூற நீங்கள் கேட்டிருக்கலாம். இந்த Chaos theory போன்று சோளகர் தொட்டியை சேர்ந்த மக்களும், வீரப்பன் என்ற ஒரு நபரால் அல்லலுற்று, அவமானப்பட்டு, கொலையுண்டு, கற்பழிக்கப்பட்டு வாழும் போதே நரகத்தை சந்தித்து, சாகாமல் நடைபிணமாய் திரிந்த கதையை கேட்கும்போது முதுகுத் தண்டு சில்லிடும் பயத்தைஉணராதோர் யாருமில்லை. வனத்தின் பிள்ளைகளாக அதனோடு இயைந்து வாழ்க்கையை நகர்த்தும் அவர்களது வாழ்வியல் நகர மாந்தர்களுக்கு கனவு வாழ்க்கையாக இருக்கிறது. சொந்த பூமியிலேயே திருடர்கள் போல சித்திரிக்கப்படுகிறோம் என்ற கவலை அவர்களிடத்து உண்டு. கஞ்சா புகைப்பதும், மான்களை, கரடிகளை சுடுவதும் அரசால் தடைசெய்யப்பட்டதால் அந்த கவலை. அவர்கள் சுட்டுத்தான் மான்கள் குறைந்தது என்பது போல அரசு அவர்களின் துவக்கைகளை பிடுங்கி எரிந்தது. அவர்களின் காடாளும் உரிமையை...