Posts

Showing posts from 2023

சோளகர் தொட்டி

Image
  அறிவியலில் Chaos theroy என்றொன்றுண்டு, நிகழ்வுகள் ஒன்றனுக்கொன்று தொடர்புடையவை என கூறலாம். பிரபலமான எடுத்துக்காட்டாக, ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பிற்கும், எங்கோ உருவாகும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று நீளும். இந்த எடுத்துக்காட்டை நீங்கள் தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் கூற நீங்கள் கேட்டிருக்கலாம். இந்த Chaos theory போன்று சோளகர் தொட்டியை சேர்ந்த மக்களும், வீரப்பன் என்ற ஒரு நபரால் அல்லலுற்று, அவமானப்பட்டு, கொலையுண்டு, கற்பழிக்கப்பட்டு வாழும் போதே நரகத்தை சந்தித்து, சாகாமல் நடைபிணமாய் திரிந்த கதையை கேட்கும்போது முதுகுத் தண்டு சில்லிடும் பயத்தைஉணராதோர் யாருமில்லை.  வனத்தின் பிள்ளைகளாக அதனோடு இயைந்து வாழ்க்கையை நகர்த்தும் அவர்களது வாழ்வியல் நகர மாந்தர்களுக்கு கனவு வாழ்க்கையாக இருக்கிறது. சொந்த பூமியிலேயே திருடர்கள் போல சித்திரிக்கப்படுகிறோம் என்ற கவலை அவர்களிடத்து உண்டு. கஞ்சா புகைப்பதும், மான்களை, கரடிகளை சுடுவதும் அரசால் தடைசெய்யப்பட்டதால் அந்த கவலை. அவர்கள் சுட்டுத்தான் மான்கள் குறைந்தது என்பது போல அரசு அவர்களின் துவக்கைகளை பிடுங்கி எரிந்தது. அவர்களின் காடாளும் உரிமையை...

kite

 https://drive.google.com/drive/folders/1Xw3y2YiG0iXfyn45i3jzZT76-tzo0WYk

காதலிக்க நேரமில்லை

Image
பொன்மகள் பாதம் மண்மகள் அறியா கண்ணகியாய் நானும் இங்கே உன்னை நினைத்து  என் நாட்களை கழித்துக்கொண்டு காதலை கூட்டிக்கொண்டும்  இருக்கிறேன். நீயோ கோவலனாய் என்னை புறந்தள்ளி என் அகம் நீங்கி  சென்றுவிட்டாய். படிக்காத என் அம்மா, என்னை படித்தது போதுமென்று கையில் அடுப்பூத ஊதாங்கோலை கொடுக்காமல் பேனாவை கொடுத்து அம்மா அனுப்பினாள் கல்லூரிக்கு. இரண்டு மாதங்கள் ஓடியது, அவ்வளவு கூட்டம் அந்த பேருந்தில், வௌவ்வால் போல நீ பேருந்தில் தொத்திக் கொண்டிருந்தாய். கூட்டம் குறைந்ததும் படியில் நின்றபடி உன் நண்பர்கள் சூழ மிரட்டும் தொனியில் 'உன் பெயரென்ன' என்று கேட்டாய்.  முதல்முறையல்ல பேருந்தின் வௌவ்வால்கள் என்னை வம்பிழுப்பது. பெண்ணாய் பிறந்துவிட்டேனே பகடிகளை தாங்கிக்கொள்ளும் பக்குவம் எனக்கு எப்போதோ வந்துவிட்டது. பயந்தே நான் சொன்னேன் 'இசை' என்று.  ஊர்... விலாசம்... கேட்டு நச்சரித்தாய், சொன்னேன் அத்தனையும் பயந்தே!  அந்த பேருந்தில் தான் என் தினசரி என்றபோது பயந்தென்ன லாபமென சகஜமாகிவிட்டேன்.  நிறுத்தம் வந்ததும் என் பின்னே துரத்துவதாக எண்ணி மிரண்டேன். பின்பு தான் தெரிந்தது உனக்கும் அது தான்...

tour

Image
 

ram

Image
 

trek

Image