இந்த பேருந்துகள் தான் எத்தனை காதலை தூக்கித் திரிகிறது. 💑 இருக்கைக் கம்பியின் எதிரெதிர் பக்கங்களில் நானும் அவளும் சாய்ந்துக்கொண்டு பத்துக் காத தூரம் கண்கள் பார்க்காதபோது பார்த்துக்கொண்டோம். மின்னலும் பாயவில்லை பட்டாம்பூச்சியும் பறக்கவில்லை எனக்குள். மாறாக மூளை, நினைவுகளை பின்னோக்கியக்கி அத்தை மகள் சாயல் அவள் முகத்தில் தெரிகிறதுப் பார் என்றது. பதினெட்டு ஆண்டுகள் முன்னர் என் ஊருக்கு மேற்கே ஒன்றரை காத தூரத்திலுள்ள அத்தைப் பெண்ணின் ஊருக்கு சென்றிருந்தோம். சிறு வயதில் நமக்கு பிடித்தமான பெட்டிக் கடைக்கு புதிதாக சரக்கு வருகையில் சிறுவ சிறுமியற்களை வியப்பிலாழ்த்தும் நகரத்து பொம்மைகளை விளம்பரத்திற்கு தொங்கவிட்டு கல்லா கட்டும் கடைக்கார அக்காவிடம் நான்கு இருபத்தைந்து காசுகளை கொடுத்து, பூசியவுடன் ஒட்டும் மருதாணிச் சாயத்தை வாங்கி வைத்திருந்தாள் அத்தைப் பெண் இமய புதல்வி. எனக்கு பத்தும் அவளுக்கு என்னைவிட பத்து மாதம் அதிகமாகவும் இருந்தது வயது. நெடுங்காலம் கழித்து சந்திக்கின்றோம். ஆனந்தமாய் தம்பி என்று வரவேற்றாள். தம்பி அல்ல என்பதை பின்பு தான் உணர்ந்துக்கொண்டாள். உபசரிப்புகள் முடிந்ததும் அவளுக்காக...
Comments
Post a Comment