ஆணுக்கு மட்டுமல்ல...📝
ஆணுக்கு மட்டுமல்ல, ஆயிரம் கனவுகள் பெண்ணுக்கும் உண்டு👸👧
இப்படி நிற்காதே,பெண் பிள்ளை சத்தமாக பேசக்கூடாது,ஆண் நட்பு கூடாது என்று ஆயிரம் தடைகள் இவற்றை எல்லாம் உடைத்து ஒருத்தி மேலே வந்தால் அவள் அடங்காபிடாரி,திமிர்பிடித்தவள் அவளை தவறாக நோக்கும் கண்கள். விரும்பும் உடை ,விரும்பும் வாழ்க்கை,காணும் கனவுகள்,இலட்சியம் இவற்றை எல்லாம் நிறைவேற்ற பெண்கள் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. டாக்டர் ஆக வேண்டும்
போலிஸாக வேண்டும் கலெக்டர் ஆக வேண்டும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு அது ஓர் இலக்காகவும்,என்னத்தான் காலம் முன்னேறிவிட்டது என்று மார்த்தட்டினாலும் பெண்களுக்கு இவை இன்றும் பெரிய கனவாகவே உள்ளது.
20 வயதானதும் இதுவரை அவள் பார்த்திராத சொந்தங்கள் சுற்றி வளைக்கும், இந்த ஊரில் நல்ல வரன் உள்ளது ,அங்கே...இங்கே... என ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பதாக எண்ணி மண்ணள்ளி மூடிவிட.
பெற்றவர்களின் பாசம் என்னும் மாய வலையில் சிக்கி அவர்களுக்காக,தான் கண்ட கனவுகளை கொன்றுவிட்டு தன் மனதுள்ளே புதைத்துவிட்டு,நடைபிணமாக மணமேடை ஏறுகிறாள்.மஞ்சள் கயிற்றில் அவளை சிறை வைத்து விடுகிறார்கள் சுதந்திர கைதியாக.
அன்றோடு அவள் தனது இலட்சியத்தை அதிகார பூர்வமாக அடக்கம் செய்கிறாள்.💔

Super ram
ReplyDeleteசிறப்பு ராம்....
ReplyDeleteReally touching....
ReplyDeleteபெண்களின் உணர்வுகளை மதிக்கத்தக்க ஆண் கணவனாக கிடைத்தால் பெண்களின் கனவுகள் புதைக்கப்படுவதில்லை. By Your sister.. Elakkiya Saravanakumar
ReplyDelete