மழை
புரவிகளை பூட்டிக்கொண்டு
மாலை இளம்பரிதி அந்த இரட்டை மலைக்குள்...
முதல் வகுப்பில் நாம் வரைந்தோமே
அதே இரட்டை மலைக்குள் சென்றுறங்க,
குறட்டை ஒலி இடியாய் கேட்டது.
கார்மேக துகிலுடுத்தி
வான் மேடையில் மழை நிறுத்தி
வானமகள், மின்னலாய் தோன்றினாள்.
செவ்வானத்து செம்மை கரைய,
புவியரசியின் ஒப்பனை கலைக்க,
விண்ணரசித் தூறிவிட்டாள்.
தூறலில் நனைந்த புவியரசி
சுவாசம் பெற்றாள்
புதுமழையில் நனைந்த பூக்களின்
வாசம் பெற்றாள்.
இன்று பெய்த மழைக்கு
நாளை குடைபிடிக்கவிருக்கும்
காளான்களுக்கு சொல்லிவிடுங்கள்
அழகிப் போட்டியில் வென்றது
புவியரசி என்று
ராம்
Comments
Post a Comment